தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எஸ்ஆர் ப்ரைம்  ஜூனியர் கல்லூரியை சேர்ந்த 30 மாணவிகள் திடீரென உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதை அறிந்த கல்லூரியின் அட்மின் ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். வயிற்று வலி, வாந்தி என மாணவிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விடுதியில் சாப்பிட்ட சாம்பார் சாதமும் சிக்கன் கறியும் தான் இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெற்றோருக்கும் கல்லூரி நிர்வாகத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 18 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 12 மாணவிகள் மட்டும் சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களும் 24 மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்  என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.