இயக்குனர் சீனு ராமசாமி மீதான பாலியல் புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென் மேற்கு பருவகாற்று, தர்மதுரை என பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது இடம், பொருள், ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில், படப்பிடிப்பின்போது, நடிகை மனிஷாவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாகவே அப்படத்தில் இருந்து மனிஷா விலகியதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை சீனு ராமசாமி முழுவதுமாக மறுத்துள்ளார். இந்த பிரச்னை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.