தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சங்கீதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளிலும் பிசியாக நடித்து வந்தவர். பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் நல்ல பெயர் பெற்றார். தொடர்ச்சியாக வாய்ப்புகள் வராத காரணத்தால் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதற்கு இடையில் பாடகர் கிரீஷை  திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தற்போது பெரிய பிரபலங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் .

இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்திருப்பார். இதற்கிடையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய் என்னுடைய எனக்கு நிஜ வாழ்க்கையில் ஒரு அண்ணன் போன்றவர். என்னை குறித்து ஏதாவது சர்ச்சை எழுந்தால் முதலில் கேட்பவர் அவர் தான், என்னுடைய திருமண வாழ்க்கை மிகுந்த அக்கறை கொண்டவர். என் காதல் விவகாரத்தை முதலில் அவருடன் தான் பகிர்ந்தேன் என்று உருக்கமாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய்க்கு இப்படி ஒரு குணம் இருக்கிறதா? என்று விஜய் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.