தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிமாறன் கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, நான் எப்போதும் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது உள்ளூர் கலாச்சாரம், மொழி மற்றும் நிலத்தின் அடிப்படையில் தான் எடுப்பேன். எழுத்தாளர் ஜெயமோகன் 1998 ஆம் ஆண்டு எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி அதனோடு நான் செய்த ஆராய்ச்சிகளை மையமாகக் கொண்டு எடுத்த திரைப்படம் தான் விடுதலை என்று தெரிவித்துள்ளார்.