நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது திரையுலகினர் மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது . இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜரான நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில், எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்து விடு; உன் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தர வேண்டும். உங்கள் மனம் வருத்தப்பட்டிருப்பதாக காவல் அதிகாரி சொல்ல, ஐயஹோ எனக்கும் வருத்தம் என்று கூறினேன் என மன்சூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.