‘கங்குவா’ படத்தின் சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததில் சூர்யாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் நடிகர்  அவருடைய X தள பக்கத்தில், ”அன்பிற்குரிய நண்பர்கள், அன்பான ரசிகர்களே! நான் விரைவில் குணமடைய வேண்டி, நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு மனமார்ந்த நன்றி. எனது உடல்நலம் சற்று முன்னேறி உள்ளது. உங்களின் அன்பிற்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.