நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருந்த சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்.

நடிகை சமந்தா ஓரளவுக்கு நோயின் தாக்கத்திலிருந்து மீண்டு தற்போது நடிப்பில் வேகம் காட்டி வருகிறார். நிலையில், செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெறும் போட்டோவை பகிர்ந்துள்ளார். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்த செயற்கை சுவாச கருவியுடன் ஹைபர் பேரிக் என்ற சிகிச்சையை மேற்கொண்டு வருவதாக சமந்தா இந்த சிகிச்சை எடுப்பதாக தெரிகிறது.