மேயாதமான் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர் இந்துஜா. இதையடுத்து 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, மகாமுனி, பிகில், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இப்போது அவர் காக்கி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்துஜா நடிக்கும் புது படம் குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த படத்தின் டைட்டில் “பார்க்கிங்” ஆகும்.

இந்த படத்தை பலூன் படத்தின் இணை இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார். இதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். அதோடு எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உட்பட பலர் நடிக்கிறார்கள். சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் சூட்டிங் சென்னை சுற்றி மும்முரமாக நடந்து வருகிறது.