தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகியாகவும் கதாநாயகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் கடந்த வருடம் ரிலீஸ் ஆன புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலை பாடியிருந்த நிலையில், அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா தற்போது ஆர். அழகு கார்த்தி இயக்கத்தில் நோ என்ட்ரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ஜம்போ சினிமாஸ் தயாரித்துள்ள நிலையில், ஆதவ் கண்ணதாசன், மானஷ், ரன்யா ராவ், ஜான்வி மற்றும் ஜெயஸ்ரீ போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் நோ என்ட்ரி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.