அது என்ன சார் ஐட்டம் டான்ஸ். நடிகைகளை ஐட்டம்னு சொல்லலாமா? இதையெல்லாம் தணிக்கை குழு எப்படி அனுமதிக்கிறது என்றே தெரியவில்லை. நடிகைகள் மோசமான உடைகளை அணிந்து கொண்டு சினிமாவில் குத்தாட்டம் போடும் போது என்னுடைய மகளுடன் உட்கார்ந்து அந்த பாடல்களை பார்க்க முடியவில்லை.

அதற்கெல்லாம் தணிக்கை குழு எந்த தடையும் சொல்லாது என இயக்குனர் கோபி நயினார் பேசி தனது ஆதங்கத்தையும் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி உள்ளார். இவர் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் மனுஷி படம் விரைவில் வெளியாகவுள்ளது.