தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் திரிஷா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று கில்லி படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த படத்தை பார்ப்பதற்கு திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி டிக்கெட் விற்பனையை வைத்து பார்க்கும் போது முதல் நாளில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் விஜயின் படம் வசூல் சாதனை புரிந்து வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.