தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் தன்னுடைய பெயரை மாற்றி விட்டாரா என்று விவாதம் தொடங்கியுள்ளது. விஜய் இதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் ஜோசப் விஜய் என இருக்கும். ஆனால் தற்போது தனது கட்சியின் லெட்டர் பேடில் ஜோசப் என்பதை நீக்கிவிட்டு விஜய் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதை இயக்குனர்கள் கரு.பழனியப்பன் மற்றும் அமீர் ஆகியோர் சந்தேக கண்ணோட்டத்துடன் விமர்சித்துள்ளனர்.