மாணவா்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சாா்பில் புதிய தளம் ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அவர் பேசுகையில், மாணவா்களின் யோசனைகள் வீட்டிலேயே முடிந்து விடாமல் அதைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

வானவில் மன்றம் மூலம் 710 கருத்தாளர்கள் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற மாணவா்களுக்கும் அறிவியல் சென்றடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.