தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் திண்டுக்கல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து அவர், கட்சித் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என தளபதி கூறவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற திண்டுக்கல்லை தளபதியின் கோட்டையாக மாற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார்.