தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனுடைய நடிகர் விஜய் நேற்று அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவிக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக பேட்டிஅளித்த அவரிடம், அம்பேத்கருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவிக்க உள்ளனர், அவர் அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், அவரும் அரசியலுக்கு வரட்டும், Always Welcome, சும்மா நானும் அரசியலில் குதிக்கிறேன் குதிக்க கூடாது. வந்து பாருங்க எவ்வளவு கஷ்டம் என தெரியும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.