தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருடைய மாமா மற்றும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். இவர் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் வீட்டில் பிரச்சனை இருப்பதாகவும் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் வெளிவரும் சர்ச்சைகள் பற்றி பேசியுள்ளார். அதாவது நடிகர் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டதாகவும் தற்போது இருவரும் பிரிந்து விஜய் சென்னையிலும் சங்கீதா லண்டனிலும் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு திரிஷா மற்றும் விஜய் இடையே ரகசிய உறவு இருப்பதாகவும் பேச்சுகள் அடிப்படுகிறது. இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் தற்போது செல்வகுமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நடிகர் விஜயின் மகன் அமெரிக்காவில் படிக்கும் நிலையில் அவருடைய மகள் லண்டனில் படிக்கிறார்.
மகன் தைரியமானவர் என்பதால் அவருக்கு பாதுகாப்பு என்பது தேவையில்லை அவரை அவரே பார்த்துக்கொள்வார். ஆனால் பெண் குழந்தையை தனியாக விட முடியாது. அவருக்கு கண்டிப்பாக பாதுகாப்பு என்பது தேவை. இதன் காரணமாகத்தான் தன் மகளுடன் லண்டனில் சங்கீதா இருக்கிறார். நடிகர் விஜயை பார்த்துக் கொள்ள ஓராயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ள அவருடைய மனைவி சங்கீதா மட்டும்தான் இருக்கிறார். மற்றபடி கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது இருவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று கூறினார். இதற்கு முன்னரும் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் விஜய் வீட்டில் சங்கீதா இருப்பதாகவும் அவருக்கு மேக்கப் போட சென்றதாகவும் கூறியிருந்தார். மேலும் இதன் மூலம் விஜய் மற்றும் சங்கீதா பிரிந்ததாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
