தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கி அட்லூரி. இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து விஸ்வநாதன் & சன்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் நிலையில் மமீதா பைஜூ ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து மிகவும் வைரலாகி வருகிறது.
