
வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் தற்போது தெலுங்கிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். தமிழில் இவருக்கு கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதுபோல தற்போது தெலுங்கிலும் இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. தெலுங்கில் இவர் நடித்த “கிராக்”, “நந்தி” உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஹிட்டாகியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “என்னிடமும் ஹீரோவும், டைரக்டரும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண முடியுமானு கேட்டு இருக்காங்க. நான் செய்ய மாட்டேன். எனக்கு குற்ற உணர்ச்சி இல்லாமல் தூங்கனும்” என்றார். நடிகரின் மகளுக்கே இந்த நிலையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.