ஜப்பான் நாடு 2025ஆம் ஆண்டில் ஒரு புதுமையான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து மக்கள் நடக்கும்போது உருவாகும் ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில், பைசோஎலக்ட்ரிக் (Piezoelectric) தரைத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தளங்கள் மக்கள் நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை மின்சாரமாக மாற்றுகின்றன.

டோக்கியோவில் உள்ள ஷிபுயா மற்றும் டோக்கியோ ரயில் நிலையங்கள் போன்ற பரபரப்பான இடங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மக்கள் நடக்கும் இந்த இடங்களில், ஒவ்வொரு அடியும் சிறிய அளவு மின்சாரத்தை உருவாக்கி  விளக்குகள், டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் மற்றும் பொது மின்சார சார்ஜிங் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் நடப்பதை ஊக்குவிப்பதன் மூலம், இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் வெளியான ஒரு காணொளியில், மக்கள் இந்த தரைத் தளங்களில் நடக்கும்போது மின்சாரம் உருவாவதை பார்க்க முடிகிறது. இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by @solved_science