சைப்ரஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 12-வது சுற்றுப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சீன வீராங்கனை ஜினர் ஜூவிடம் தோல்வியடைந்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சீன வீராங்கனை சிறப்பாக ஆடி வைஷாலியை வீழ்த்தினார்.
அடுத்த உலகச் சாம்பியனைத் தீர்மானிக்கும் முக்கியமான தொடர் என்பதால் இந்தத் தோல்வி ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தொடரில்இதுவரை 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள வைஷாலி, மொத்தம் 7 புள்ளிகளுடன் சீன வீராங்கனை ஜினர் ஜூவுடன் இணைந்து இன்னமும் முதலிடத்திலேயே நீடிக்கிறார்.
இந்தத் தொடரில் இன்னும் 2 சுற்றுப் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
