தெலுங்கானாவில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உணவு விநியோகம், வண்டி ஓட்டுதல் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் உடல்நல காப்பீடு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராஜு ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு மற்றும் 10 லட்சம் ரூபாய் உடல் நல காப்பீடு வழங்கப்படும். அதாவது கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் ஓட்டுநர்கள், உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை மேம்படுத்த இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்து காப்பீடு திட்டத்தைப் பெற மாநிலத்தில் முகாம் நடைபெற உள்ளதாகவும் ஜனவரி 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக அல்லது நேரடியாக விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.