ஒடிசா மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளான நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகளை வழங்க அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. மருத்துவ மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் பயனளிக்கும். மாநிலம் முழுவதும் 735 பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நடத்தக்கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் மூலம் பயிற்சிகள் தினசரி அட்டவணையுடன் நடத்தப்படும். இதற்காக நிபுணர்கள் மற்றும் வழிகாட்டு குழுக்களை அரசு நியமனம் செய்துள்ளது.

உயர்கல்வி இயக்குனரகம் பயிற்சிகளை தொடங்கிய ஒரு மாதத்திற்கு பின்னர் திட்டத்தை மதிப்பாய்வு செய்து மாணவர்களை மதிப்பீடு செய்வதற்காக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறையில் தேர்வுகள் நடத்தி சோதனை செய்யப்படும். மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளில் தனியார் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத மாணவர்களுக்கு அரசின் இந்த இலவச பயிற்சி வகுப்புகள் திட்டம் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.