புத்தாண்டையொட்டி பல வங்கிகளும் வங்கி கடன் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் bank of maharashra வங்கி வீட்டு கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைத்து இருக்கிறது. அதாவது வீட்டுக் கடன் விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது. இதனால் வீட்டுக் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 8.35% அடிப்படையில் வங்கி கடன் கொடுக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி வீட்டு கடனுக்கான செயலாக்க கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பலன்களை பெற முடியும். அதாவது வங்கி டெபாசிட்டுகள் 17.9% அதிகரித்து மொத்தமாக 2.46 லட்சம் கோடி இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான சலுகைகள் வழங்கப்படுகிறது.