இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில் வங்கிக் கணக்கு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. மத்திய அரசின் ஜன் தன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவசமாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. போதிய அளவை இருப்புத்தொகை இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து பரிவர்த்தனை இல்லாத வங்கி கணக்குகளை வங்கி நிர்வாகம் ரத்து செய்து வந்தது.

இது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் இரண்டு ஆண்டுகளாக எந்தவித பரிவர்த்தனையும் செய்யாவிட்டாலும் ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசின் உதவித்தொகை மற்றும் பணப்பரிமாற்ற திட்டங்களுக்காக தொடங்கப்படும் கணக்குகளுக்கு எந்தவித அபராதமும் கிடையாது எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.