இந்த நவீன காலக்கட்டத்தில் ஷாப்பிங் செய்யவோ (அல்லது) ஏதேனும் கட்டணங்களை செலுத்தவோ பைகளில் பணத்தை எடுத்து சென்று அதனை எண்ணி கொடுப்பதைவிட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது (அல்லது) ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான ஒன்றாக மாறி விட்டது. மக்கள் பல பேரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை எளிதான ஒன்றாக கருதுகின்றனர். இதன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவோ, பெறவோ முடிகிறது.

இந்நிலையில் UPI மூலம் பணம் அனுப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள் ஜன 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ஒருவருக்கு ரூ.2000 அனுப்பிய பிறகு அதே நபருக்கு மீண்டும் பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு UPI மூலம் அதிகபட்சமாக ரூ.5,00,000 வரை பணம் அனுப்பலாம். ப்ரீபெய்டு பேமண்ட் கருவி மூலம் ரூ.2000க்கு மேல் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைக்கு 1.1% கட்டணம் வசூலிக்கப்படும்.