அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தொலைதூர கல்வி வழங்கி வருகின்றது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாம்செமஸ்டர் முதல் நான்காம் செமஸ்டர் தேர்வு நடைபெறும் தேதி குறித்த முழு விவரங்கள் அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.

அதன்படி எம் பி ஏ,எம்சிஏ மற்றும் எம் எஸ் சி பாடப்பிரிவுகளுக்கான தேர்வு ஜூலை 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. செமஸ்டர் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு அட்டவணையை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.