தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.  செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் செந்தில் பாலாஜி  அமைச்சர் பதவியில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும்  ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் ட்விட்டரில், ”கவர்னரே! உங்கள் மூக்கு எவ்வளவு நுழையலாம் என்பதற்கு அரசியல் சாசனம் கிழித்துள்ள கோட்டை மீறாதீர்! அத்து மீறலை அனுமதிக்காது தமிழ்நாடு” என பதிவிட்டுள்ளார்.