தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான தொண்டாமுத்தூரில் அதிமுகவின் ‘கொங்கு சிங்கம்’ எஸ்.பி. வேலுமணி இமாலய வெற்றி பெற்றுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்த அவர், தொடர்ந்து 4-வது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுமார் 2.93 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் பதிவான 2,59,606 வாக்குகளும் 27 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அறிமுகக் கட்சியான தவெக-வின் சதீஷ் ஆகியோர் கொடுத்த கடும் சவால்களை முறியடித்து வேலுமணி(46,348) தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டார்.
கொங்கு மண்டலத்தில் திமுகவின் வியூகங்களைத் தகர்த்து, அதிமுகவின் அசைக்க முடியாத பலத்தை இந்த வெற்றியின் மூலம் அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
