ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இந்த போராட்டத்தில் இறுதி கட்டத்தில் கே.எல் ராகுல் 34 ரன்கள் எடுத்து 103.03ஸ்டிரைக் ரேட்டுடன் அணி வெற்றி பெற உதவினார்.
இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில், “இது மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். அதன் பலனாக வெற்றி வந்தது. அதிரடியாக விளையாடும் ஸ்டைல் எனக்கு இயற்கையாக கிடையாது. ஆனால் அதை நான் செய்ய விரும்பினேன். நீங்கள் எதையாவது புதிதாக முயற்சிக்கும் போது அணி நிர்வாகத்தின் ஆதரவு உங்களுக்கு வேண்டும்.
அதை 2023 உலக கோப்பையில் ராகுல் டிராவிட்டும் தற்போது கௌதம் கம்பீரும் எனக்கு கொடுத்தார்கள். அவர்களுடைய ஆதரவால் சமீப வருடங்களாக நான் வித்தியாசமாக விளையாடினேன். ஜடேஜா எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வருவார் என்பது டாப்பில் நீங்கள் அடுத்தபடியாக விளையாடுவதற்கான தன்னம்பிக்கை கொடுக்கிறது” என்று கூறினார்.
