தொடக்கக் கல்வி பட்டயப் தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப். 27ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல், மற்றும் 2ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், தனித் தேர்வர்களின் முடிவுகளை www.dge.tn.gov.inஇல் பார்க்கலாம். விடைத்தாள்களை மறுகூட்டல், ஒளி நகல் ( SCAN COPY) செய்ய அக்.3 – அக்.5ம் தேதி மாலை 5 மணி வரை மேலே உள்ள இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம்