தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ‘ஏமாற்று வேலை’ என நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சண்முகம், “நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நடுத்தெருவில் நிறுத்தியதே பாஜகதான்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் எங்காவது பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதா? நாடு முழுவதும் அதனை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? எனப் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார்.
இந்த விவாதம் தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் திட்டத்தைக் குறை சொல்லும் முன், பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டும் எனச் சண்முகம் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.
