தளபதி விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்றைய தினம் (ஜன. 03) இப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகி இணையத்தையே ஆக்கிரமித்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகி செங்கோட்டையன், “ஜனநாயகன் டிரெய்லர் மிகவும் எழுச்சியாக இருக்கிறது. படம் வெளியான பிறகு மக்கள் அனைவரும் வியக்கும் வகையில் இது அமையும்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு இடையே வெளிவரும் இந்தப் படம், அவரது ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
