விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவரும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவருமான அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினமான இன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த சேவையைப் போற்றும் விதமாக விஜய் இந்த மரியாதையைச் செலுத்தியதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

“>

அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் விஜய், தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பசும்பொன் தேவரின் சேவைகளைப் போற்றி அவருக்கு மரியாதை செலுத்தியது முக்கியத்துவம் பெறுகிறது. சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகவும் தேவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை இந்த நிகழ்வின் மூலம் விஜய் நினைவு கூர்ந்தார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன் நினைவிடத்துக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், விஜய் சென்னையில் இருந்தபடியே தேவரின் படத்திற்கு மரியாதை செலுத்தி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.