புனே ரயில்நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பயணியின் உயிரை காவலர் ஒருவர் தைரியமாக காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. சம்பவத்தின் முழு வீடியோவும் நடைமேடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
விபரங்களின்படி, புனே ரயில்நிலையத்தில் ஒரு பயணி, ரயிலை தவறவிட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது கால் தவறி நடைமேடையில் விழுவது போல சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீசாரான பாண்டுரங் சவான் உடனடியாக செயல்பட்டு, அச்சமின்றி பயணியை பாதுகாப்பாக இழுத்து வெளியே கொண்டுவந்தார்.
पुणे रेलवे स्टेशन पर एक बड़ा हादसा उस वक्त टल गया जब रेलवे पुलिसकर्मी पांडुरंग चव्हाण ने चलती ट्रेन में चढ़ने की कोशिश कर रहे एक यात्री की जान बचा ली। यात्री का पैर फिसलते ही वह प्लेटफॉर्म और ट्रेन के बीच गिर पड़ा, लेकिन ड्यूटी पर तैनात कांस्टेबल ने तुरंत दौड़कर उसे बाहर खींच… pic.twitter.com/BuyNpQuJHB
— ABP News (@ABPNews) August 3, 2025
ஒரே சில நொடிகளில் நிகழ்ந்த இந்த நடவடிக்கை, அந்த பயணியின் உயிரைக் காப்பாற்றியது. காவலர் பாண்டுரங்க் சவானின் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. சிசிடிவி வீடியோவின் அடிப்படையில் பலரும் அவரை “வீர காவலர்” என புகழ்ந்து வருகின்றனர்.
