தென்தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக தென் தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கனமழையும் பெய்து வருகிறது. தொடர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு,
அரக்கோணத்தில் இருந்து 4 பேரிடர் மீட்புக் குழுக்கள் புறப்பட்டு சென்றுள்ளன.