தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ.டி20 கிரிக்கெட் தொடரில், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த வீரர் பிரெனிலன் சுப்ராயன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இவர், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில் சிறப்பாக பந்துவீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தென்ஆப்பிரிக்க தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ள இவர், தற்போது டி20 லீக் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். மைதானத்தில் அவரது ஆட்டம் ஒருபுறம் பேசப்பட்டாலும், அவரது கையில் இருக்கும் “ஓம் சரவண பவ” என்ற டாட்டூ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Joburg Super Kings (@joburgsuperkings)

“>

தமிழ் கடவுள் முருகனின் தீவிர பக்தரான இவர், தனது தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பச்சை குத்தியுள்ளார். இதனைப் பார்த்த தமிழக ரசிகர்கள், தென்ஆப்பிரிக்க அணியில் விளையாடும் ஒரு தமிழக வீரர் தனது கலாச்சாரத்தைப் பெருமையுடன் வெளிப்படுத்துவதைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.