இந்தூர் மேயர் புஷ்யமித்ர பார்கவ் அவர்கள், நகரின் தூய்மைப் பணியாளர்களான பெண் ‘சஃபாய் மித்ராக்களுடன்’ ஞாயிற்றுக்கிழமை காலை பொழுதை தேநீர் மற்றும் சிற்றுண்டி பகிர்ந்து கழித்தார். லோகாண்டே பாலம் அருகே ஆய்வில் ஈடுபட்டிருந்த மேயர், அங்கு பணியிலிருந்த பெண்களுடன் அமர்ந்து அவர்களுக்கு தேநீர் மற்றும் போஹா (அவல் சிற்றுண்டி) பரிமாறினார்.
மேலும் அவர்களின் பணிச்சூழல் குறித்து கேட்டறிந்ததோடு, தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் 1,000 ரூபாய் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் வழக்கமான ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். உலகத் தியான தினத்தை முன்னிட்டு இந்தூர் மாநகராட்சியின் ‘யோக்மித்ரா’ பிரச்சாரத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட தியான முகாமில் மேயர் பார்கவ் பங்கேற்றார்.
रविवार की सुबह की शुरुआत, अपनी स्वच्छता दीदियों के साथ..#SundayMorning pic.twitter.com/DzHZc8exQZ
— Pushyamitra Bhargav (@advpushyamitra) December 21, 2025
“>
இதனைத் தொடர்ந்து, ஆன்மீக யோகா குரு டாக்டர் ஓமானந்த் ஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மேயருடன் இணைந்து ஏராளமான பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தியானத்தில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைந்த இந்த நாள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
