தமிழக வெற்றிக் கழகம், நடிகர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய அரசியல் அலையை ஏற்படுத்தி வருகிறது. இக்கட்சியில் மக்கள் ஏராளமாக இணைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய தாளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் தவெக-வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துள்ளனர்.

இது மீனவ சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வையும், தவெக மீதான நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது. மக்களின் ஆதரவு கட்சியின் வளர்ச்சிக்கு பலம் சேர்ப்பதோடு, தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களின் குரலாக தவெக மாறி வருவதை உணர்த்துகிறது.

இதனை கொண்டாடும் விதமாக, பெரிய தாளை கிராமத்தில் தவெக-வின் கட்சிக் கொடி உற்சாகமாக பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள காணொளியில், மீனவர்களின் கப்பல்களிலும், கிராமம் முழுவதும் தவெகாவின் கொடி பறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காட்சிகள் மீனவ சமூகத்தின் ஒற்றுமையையும், தவெகா மீதான அவர்களின் அசைக்க முடியாத ஆதரவையும் வெளிப்படுத்துகின்றன. இது தவெகாவின் மக்கள் செல்வாக்கு மற்றும் தமிழக அரசியலில் அதன் வளர்ந்து வரும் தாக்கத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by sumiத்ரா (@sumimathan)