தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் மதுரை மாநாட்டில் கேப்டனுடன் விஜய் இருப்பது போல பேனர் வைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, பேனர் வைத்தது கேப்டனின் அரசியல் பாணியை விஜய் பின்பற்றுகிறாரா என்பது குறித்து அவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.

கேப்டன் மக்களுக்கான தலைவர் கேப்டன். களத்தில் இறங்கி மக்களுக்கு பணி செய்கிற ஒரு உத்தம ராகத்தான் வாழ்ந்தார். அவர் தன் சம்பாதித்தது அனைத்தையும் மக்களுக்கு உதவி செய்த ஒரு தலைவர். கேப்டன் கூட யாரையும் ஒப்பிட்டு பேசக்கூடாது. கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.