தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார்.

வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும், வீடுகளின் பொருட்களை இழந்தும் தவிக்கின்றனர். இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பிலும், தனியார் அமைப்பு மூலமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். டிசம்பர் 31ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்களித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். நிவாரண பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் சிரமமின்றி வர ஏதுவாக சுங்க கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.