பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்தச் செய்தி திரைத்துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவு குறித்து, சங்கரின் அண்ணன் உணர்ச்சியுடன் கூறியவை அனைவரையும் கண்கள் கலங்க வைக்கும் வகையில் இருந்தது. “எப்பவுமே ‘தூக்கம் வரல’னு சொல்லுவான். காலையில் 8 மணிக்கு ஷூட்டிங் இருந்தாலும், 4 மணிக்கு எழுந்து டிவி போட்டுக்கிட்டு உட்காருவான். அன்னிக்கி மட்டும் தான், ‘எனக்கு தூக்கம் வருது… கொஞ்ச நேரம் தூங்கறேன்’னு சொன்னான்.
அதான் அவன் கடைசியாக பேசின வார்த்தை,” என தனது தம்பியின் இறுதி தருணங்களை கூறினார். அவரது திடீர் மரணம் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
