நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46), உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகையும் ரசிகர்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 3 மணியளவில் அங்கிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது.

திரையுலகப் படையின் அணிவகுப்புடன், கண்ணீர் மல்க நடைபெற்ற ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம், அனைவரையும் நெகிழவைத்தது.

 

View this post on Instagram

 

A post shared by Maalai Malar News (@maalaimalar)

வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர், தனது துயரத்தை நடனத்தின் மூலம் வெளிப்படுத்திய காட்சி, காண்போரை கண்கலங்க வைத்தது. துக்கத்தில் தோய்ந்திருந்தாலும், தனது கணவரின் நினைவை நடனமாக வெளிப்படுத்திய அவரது செயல், அனைவரது மனதையும் உருக்கியது.