துலாம் ராசி அன்பர்களே,

இன்று துன்பங்கள் தூளாகும் நாள் என்று சொல்லலாம். உடன்பிறப்புகள் உதவுவார்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எந்த செயலையும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள்.

இன்று உடல் ஆரோக்கியம் சீராகும். வெளிவட்டார தொடர்புகளை விரிவு படுத்திக் கொள்வீர்கள். நிறைவான வாழ்க்கை அமையும். எந்த செயலையும் சிந்தித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி விடுவது நல்லது. இன்று வெற்றி மீது வெற்றி வரும். பெண்களுக்கு சுய தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப உறவுகள் பலப்படும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவாக அணுகி வெற்றி பெறுவீர்கள்.

இந்த நாள் இனிய கனவுகள் மேம்படும் என்று சொல்லலாம். இன்று மாணவர்கள் எதையும் யோசித்து செய்வது நல்லது. பெற்றோரிடம் கோபத்தை காட்ட வேண்டாம். சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். சக மாணவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  : தெற்கு

அதிஷ்ட எண்  : ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்   : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்