கன்னி ராசி அன்பர்களே,

இன்று மதிநுட்பத்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மகத்தான காரியங்களை செய்து முடிப்பீர்கள். இனிய பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். தாய் வழி உறவுகள் உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் அதிகரிக்கும். நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் எதிலும் தைரியமாக ஈடுபடுவீர்கள்.

இன்று முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் தொல்லை கொடுக்காமல் இருக்கும். தைரியம் வெளிப்படும். இன்று வெற்றி மீது வெற்றி பெறும் சூழல் உள்ளது. அனைத்து விஷயங்களிலும் ஆர்வமாக காணப்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். இன்று பெண்களுக்கு ஆழ்ந்த சிந்தனை வெளிப்படும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று யோசித்து எடுத்த  முடிவுகளில் வெற்றி நிச்சயம் இருக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். இன்று மாணவர்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொண்டு படிப்பீர்கள். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்