சிம்ம ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு மதிநுட்பத்தால் செயல்படும் நாள் என்றே சொல்ல முடியும். புத்தி கூர்மை வெளிப்படுத்தி வெற்றிக்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் குறை சொன்னால் பெரிது படுத்த வேண்டாம். அனைவரையும் அனுசரித்து செல்வது தான் முக்கியம்.

இன்று கணவன் மனைவி இடையே தேவையற்ற விஷயங்களால் மன வருத்தம் ஏற்படும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். திறமையான பேச்சு மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்கள் சொல்வதை நன்றாக கவனித்து விட்டு பதில் கொடுங்கள். பெண்கள் இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்.

இன்று  உத்தியோகம் செல்பவர்கள் பயணங்களின் போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். கலை துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண்  :  7 மற்றும் 9

அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்