துலாம் ராசி அன்பர்களே,

இன்று அக்கம் பக்கத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மனதில் உறுதி ஏற்படும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். காணாமல் போன பொருட்கள் கிடைக்கப்பெறும். தெய்வீக அருள் கிட்டும். சாதகமான பண வரவு இருக்கும்.

தடைகள் விலகி செல்லும். முழு முயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி பெற முடியும். மூடநம்பிக்கையையும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். பெண்கள் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். நிம்மதியான உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

எல்லோர் மனதிலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உயர்கல்வி நல்ல முறையில் அமையும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன் நிறம்