கன்னி ராசி அன்பர்களே,

இன்று மனக்குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். செலவுகளை சரி செய்து விடுவீர்கள். வியாபாரம் ரீதியான பயணம் மேற்கொள்வீர்கள். அன்பாக பேசி வந்தவர்கள் பகமை பாராட்டுக்கூடும்.

வீண் பழிச் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டாம். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பெண்கள் இன்று ஓரளவு யோகமான நாளாக அமைத்துக் கொள்ள முடியும். முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். யோசித்து எடுக்க வேண்டும். ஆழ்ந்த சிந்தனையில் காணப்படுவீர்கள்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்களிப்பீர்கள். கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும் சக மாணவரை அனுசரித்து செல்லுங்கள். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்