சிம்ம ராசி அன்பர்களே,

இன்று எதிலும் முன் யோசனையுடன் செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி கொடுக்க வேண்டுமே என்று நினைப்பீர்கள். மிகவும் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுபவத்தை பாதுகாத்துக் கொள்வீர்கள்.

திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். செலவில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டியிருக்கும். ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்கள் ஆதாயம் காண்பீர்கள். அதேபோன்று சிலருக்கு தக்க சன்மானம் கிடைக்கும். பெண்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கல்வியில் வெற்றி பெற முடியும் வெளியிடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

இன்று மாணவர்கள் முற்போக்கு சிந்தனையுடன் காணப்படுவீர்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டாம். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பிரவுன் நிறம்