கடகம் ராசி நண்பர்களே,

இன்று நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். எதிரிகள் இடம் மாறி செல்லக்கூடும். இஷ்ட தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும். செய்யும் செயல் சிறப்பாக முடியும். சந்திராஷ்டமம் இருப்பதால் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற விஷயங்கள் தலையிட வேண்டாம். மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.

பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். செய்யும் செயலை நிதானமாக செய்வது நல்லது. சாதகமான நல்ல பலன் வரும். பயம் வேண்டாம். இன்று பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். அக்கம் பக்கத்தில் கவனமாக பேசுவது நல்லது. சந்திராஷ்டமம் முடியும் வரை பொறுமையாக இருக்கவும்.

இன்று மாணவர்களுக்கு அக்கறை மேலோங்கும். சக மாணவர்களிடம் அனுசரணையாக செல்வது நல்லது. விளையாட்டின் போது கவனம் தேவை. முன்கோபம் வெளிப்படும். பெற்றோரிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பிரவுன் நிறம்