விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று சொன்ன சொல்லை காப்பாற்றி கொடுப்பீர்கள். பெரியவர்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். தாமதமான பணிகள் விறுவிறுப்பாக செல்லும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும்.

கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. தடைபட்ட பண வரவு கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியம் சீராகும். கோபத்தால் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று பெண்கள் முழு முயற்சியால் வெற்றி பெற முடியும். இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

இன்று மாணவர்களுக்கு பல பல சிந்தனை வெளிப்படும். புது புது விஷயத்தில் ஆர்வம் செல்லும். கல்வி மீது அக்கறை ஏற்படும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பச்சை நிறம்